கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஜூலை 26, 2008

இன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

கவிஞர் ரெ. மார்த்தாண்டம்
இந்த பூவுலகையும்
உங்களின் புதல்வபுதல்விகளையும்
பேரக்குழந்தைகளையும் விட்டகன்ற நீங்கள்
என்றும் அவர்களுக்கும் அனைவருக்கும்
வழங்கும் நல்லாசியில்
நனைந்து கொண்டிருக்கின்றோம்.

என்றும் தங்களின் நினைவோடு…
நாங்கள்.

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஜூலை 26, 2008

நித்தம் பிறக்குது பூமேனி.

நித்தம் பிறக்குது பூமேனி
நீச்சசெயலுக்கு தினம் நாணி
நிறையும் வாழ்வுக்கு வகைபேணி
நேர்மை பெருக்குவார் தவஞானி

குடும்ப மாந்தர்கள் மனம்கோணி
குமுற வைக்கிறார் திரைஞானி
அறவழி என்கிறார் கோமேனி
அஞ்ச வைக்கிறார் விஞ்ஞானி
ஆட்டிப் படைக்கிறார் சில அஞ்ஞானி

அகிலமெல்லாம் வாழ வகைபேணி
அலைந்து உருகுது பல திருமேனி
அன்னை திரேசாள் அருள் ராணி
அன்பாய் ஊறிடும் நற்கேணி.

பலனைத் தராத பல காணி
பரந்து கிடக்குது; அதைப் பேணி
பலனைப் பெறுபவரும் ஞானி

வண்ண கணவன் மக்கள் நலம்பேணி
வரம்பு மீறாத அன்புஅறம் பேணி
வாட்டம் தீர்க்கும் அன்பு குலவாணி
வீட்டுக்கு வீடு பால்மேனி
வீம்புச்செயலுக்கு மனம் நாணி
விடிவு கண்டிடத் தீர்மானி
வீரச்செயலுக்கு வழிகாணி.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 18, 2007

தெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்

அலகபாத்தில் அண்ணன்
அரேபியா ரியாத்தில் தந்தை
காணியாத்தில் தாத்தா
கவனத்தில் கருத்தாக இருந்து
கடவுளிடத்தில் கஷ்டத்தை விட்டு
ஆத்திரத்தில் அறிவு மாறாதே
நல் மனத்தில் நன்றி மறக்காதே
மொத்தத்தில் மிரண்டு நிற்காதே
நெஞ்சத்தில் நேர்மை மாறாதே
அச்சத்தில் அவலம் செய்யாதே
நெஞ்சத்தில் நேர்மை இருந்தால்
சஞ்சலத்தில் சாவை தேடமாட்டோம்
கொஞ்சத்தில் குணம் கெடமாட்டோம்
கோபத்தில் கொடுமை செய்யமாட்டோம்
பஞ்சத்தில் பாவம் செய்யமாட்டோம்
வஞ்சகத்தை வசை பாடுவோம்
நம் நெஞ்சத்தில் நேர்மை கண்டு
சூரிய வெளிச்சத்தில் பணியைப் போல
வேகத்தில் விலகி கஷ்டம் மாறும்
வையகத்தில் வாழும் வரை
பொய்யரத்தில் வீழ்ந்திடாமல்
மெய்யகத்தில் நேர்மையாக
தெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 15, 2007

சித்திரைக்கண்ணு…செந்தமிழ் பொண்ணு…

சித்திரைக்கண்ணு செந்தமிழ் பொண்ணு
தமிழ் நாட்டின் கண்ணு
சின்னப்பொண்ணு செல்லப்பொண்ணு
அப்பா அம்மா சொல்கேட்டால்
வம்பேதம்மா வம்பேது.

அண்ணன் அக்கா சொல்லைக் கேளு
அடுத்த வீடு அலையாதேம்மா

வாய் பார்த்து அலைபவர்கள்
வம்பு நமக்கு வேண்டாமம்மா

கூடாத வழக்கம் பேசி
கூச்சலிடல் ஆகாதம்மா

அடிக்கடி சினிமா பார்த்தால்
அவலம் நேரும் வயதிதம்மா

உன்னைப்பார்த்து தங்கைகள் தம்பி
உயர்வு தேடிட இருப்பாயம்மா

அடக்கம் என்ற அழகு போதும்
ஆடம்பரம் வேண்டாமம்மா

கண்ணாடி முன்பே நின்று
கவனம் திசை மாறவேண்டாமம்மா

அகத்தழகு இருக்கும் வரை
அகந்தை நம்மை நெருங்காதம்மா

முகத்தழகை பெரிதாய் எண்ணி
மோசம் போக வேண்டாமம்மா

உண்மைத்திறனுடன் வீட்டில் இருந்தால்
ஊர்வம்பு நம்மைத் தீண்டாதம்மா

தையற்கலை பேணி நன்றாய் – என்
தவமகளாய் வாழ்வாயம்மா

தம்பி தங்கைகள் படித்துயர
தகுந்த பாடம் சொல்வாயம்மா

குறைவாய்ப்பேசி நிறைய படித்து
குலமகளாய் திகழ்வாயம்மா

விபரமற்றோர் கூட்டம் என்றால்
வெளியே எட்டி பாராதேம்மா

தாத்தா பாட்டி தவறை மறந்து
தகுந்த உதவி செய்வாயம்மா

தாய் தங்கை தவறு செய்தால்
தகுந்த பொறுமை கொள்வாயம்மா

கெட்ட கதைகள் பேசும் கோளை
கூடிய மட்டும் கேளாதேம்மா

பொலாங்கு நேரும் போதும்
பொறுமையும் அறிவும் வேணுமம்மா

கல்லாத என் கவியில் கூட
கருத்து சிலது இருக்குமம்மா

கொல்லவரும் கவலை கூட
குணத்தழகால் மாருமம்மா

தீராத தொல்லை கூட
தெய்வ பக்தியால் தீருமம்மா

பொல்லாத நோய்கள் ஓட
புதுமை மருந்து குலப் பெண்களம்மா.

நேர்மையான அறிவு கூட
நெஞ்சினிலே இருக்குதம்மா

சிற்பி கையில் கல்லுங்கூட
சிறந்த தெய்வ சிலை ஆகுதம்மா

குட்டிச்சுவர், கரித்துண்டு கூட
குறிப்பு பழமொழி எழுத உதவுதம்மா

ஓவியன் கையில் சாயம் கூட
உயிர்ப் படமாய் மாறுதம்மா

ஏழையின் உழைப்பில் கல் காடுகூட
இனிய சோலையாய் மாறுதம்மா

திறந்த வீட்டில் நாய் நுழையும்
திறந்து வைக்க வேண்டாமம்மா

பசுந்தோல் போர்த்திய புலிகள் உண்டு
பார்த்து நன்றாய் தெரிவாயம்மா

காத்து கருப்பு என்று பூசாரி கூட
கள்ளத்தனத்தில் திரிவானம்மா

உனக்கு மட்டும் சொல்ல வில்லை
உலகில் கதைகள் இதைப்போலம்மா

பிறக்கும் போதே அறிவாய் இருந்தவர்
இந்த புவியில் யாரும் இல்லையம்மா

எந்தன் செல்வங்கள் நீங்களெல்லாம்
ஏமாற்றாமல் ஏமாறாமல் இருங்களம்மா

சின்னவயதிலே சொல்லிப் பழக்கினால்
சீனக்குழந்தையும் தமிழ் போசுமம்மா

பழக்கத்தால் திருந்தி வராத
பக்குவம் உலகில் இல்லையம்மா

உரைக்கும் உண்மை கேட்டு நடந்தால்
அப்பா மிக்க மகிழ்வேனம்மா….

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 14, 2007

தமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்…

தமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்
தவ மகள் அன்பால் பிணைந்திருந்தாள்
பட்டிலும் பணத்திலும் மயங்கவில்லை
பண்பிலும் அன்பிலும் மயங்கி நின்றாள்
பொன்னிலும் பொருளிலும் ஏக்கமில்லை
பொட்டிலும் பூவிலும் இழைந்து வந்தாள்
மனக் கோட்டைகள் கட்டி கிறங்கவில்லை
குடிசை வாழ்விலே மனம் மகிழ்ந்தாள்
குண நலத்திலே மயங்கி வாழ்ந்தாள்
ஏழைகள் என்றால் வெறுக்கவில்லை
கண்டது கேட்டு வருத்த வில்லை
ஏற்றமுறை வாழ்வதை தடுக்காமல்
கண்ணிசைவு கண்டுமே இயங்கி வந்தாள்
சேட்டைகள் கண்டால் வெறுத்திடுவாள்
சேமங்கள் என்றால் மனம் மகிழ்வாள்
அந்த சேயிழையென்றும் என்னில் நிறைந்திருப்பாள்.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 5, 2007

சக்தியே துணை வருவாய்…

ஆதித்தன் சுழற்சி கண்டு
சோதிடம் கணிப்பதுண்டு

மாதிடம் மையல் கொண்டு
மனத்திடம் குறைவதுண்டு

சாதித்த செயல்கள் கொண்டு
போதிக்க நன்னையுண்டு

பாதிப்போர் நிலைமை கண்டு
மீதி என்ன நடக்குமென்று
வாதிக்கும் மனங்கள் இன்று

சோதிக்கும் சிவனே நீயும்
ஆதிக்கம் நேர்கெடாமல்
போதிப்பாய் அறிவை என்றும்.

ஜோதியாய் உடனிருந்து
பதிபக்கி குறையாமல்
மதி நலன்கள் குன்றாமல்
பதி மனதை புரிந்து நல்ல
பக்தியோடு பாக்கியங்கள்
பல திறனும் பெற்று வாழ
ஆதியே ஜோதியாம் எங்கள்
சக்தியே துணை வருவாய்.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 1, 2007

அறிவென்ற பலாச்சுளை…

இடையில் சாவோர் கோளை
இவர் விட்டுச் செல்லும் தேளை
நம்பி எவரும் தொட்டிடும் வேளை
கொட்டப்படுவோம் நாளை.

திருடலாம் கள்வர்கள் சொத்துக்களை
திருடிக்குறையுமா அறிவென்ற பலாச்சுளை
தீங்கு மறைக்கவரும் வேளை
திரும்பிப்பார் நல்லோர் சுவடுகளை
திருப்பிப்பார் நல்லோர் ஏடுகளை
திருட முடியுமா நம் திறமைகளை

திமிரு தினவு தீங்கு வெறும் ஊளை
இவைத் தேடித்தராது நல்ல நாளை
புலியை எதிர்க்கும் கொம்புக் காளை
கருப்புத் துணிக்கே மிரளும் ஒருவேளை

கற்பு கடமை கட்டுப்பாடு தரும் புகழை
காலம் தெளியவைக்கும் நாளை
அன்பு அறிவு அடக்கம் ஏழை
யாரும் திருடிக்குறையாத பேழை

தெய்வத்தை வணங்கிப்பெரு அருளை
நல்ல தேவைக்கே செலவுசெய் பொருளை
அன்போடு ஒன்றுசேரும் நாளை
ஆவலோடு எதிர்பார்ப்போம் நாளை
ஆண்டவனை வேண்டிடுவோம் தினமிருவேளை.

ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 30, 2007

மௌனமே கவிதையாய்…

மல்லிகை மலர்கள் மலர்கின்றபோது
மனத்தை மயக்கும் மணம் எழும்போது
தென்றல் காற்று தழுவிடும் போது
தேன்துளிபோல் மழை சிதறிடும் போது
அழகிய மயிலொன்று ஆடிடும்போது
ஆசையாய் குயிலொன்று கூவிடும் போது
முழுநிலா வானிலே மகிழ்கின்ற போது
மௌனமே கவிதையாய் பொருள்தரும் போது
அழகியே! உன்னை நான் நினைத்துக்கொள்கின்றான்
அலைகின்ற நெஞ்சினை அடக்கப்பார்க்கின்றேன்
அடக்கும் முயற்சியில் தோல்வி காண்பதால்
விழிகள் உதிர்க்கின்ற வேதனைச் சரங்களை
மறக்காமல் அப்பாவிமகளுக்குச் சூட்டியே
நெஞ்சம் அழிகின்றேன்! அவள் வஞ்சம் நினைப்பதால்
எண்ணம் மறக்கிறேன்! எண்ணம் மட்டுமா?
என்னையும் மறக்கிறேன்.

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 29, 2007

நெஞ்சம் நிறைய நீதி இருக்கு…

நேற்று வந்தோம் இனிறிருப்போம்
நாளை போவது நிஜமடா

நேரில் இந்நிலைமை கண்டும்
நெஞ்சில் பயமும் ஏனடா

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
அகந்தை வேண்டாம் கேளடா

பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
கெட்டதை பழக்கும் சினிமா ஏனடா

கோழி கூட குஞ்சை காக்க
பருந்தை விரட்டும் பாரடா

இது போல் கோடி செயலின்
மொத்த உருவம் தாயடா

நூலாய் தேய்ந்தும் பாலாய் தந்து
நோயில் காத்தவள் தாயடா

அவள் நெடியஉருவம் உருகி குறுகி
உலகில் அலைவது ஏனடா

அன்னை தந்தை ஆசான் தெய்வமென்பது
அரிச் சுவடி பாட்டடா.

அவர்கள் அந்திமக் காலம் காக்கும்
ஆண்மகனும் உலகில் குறைவடா.

நெஞ்சம் நிறைய நீதி இருக்கு
சொல்ல முடியா நிலையடா.

வஞ்சகத்தை நெஞ்சகத்தில்
வரவிடாமல் விரட்டடா

மந்திரத்தால் மாங்காய்
வந்தது நேற்றடா

தந்திரத்தால் எந்திரத்தால்
மலையே வருகுது இன்றடா

உற்றுக்கவனித்து செயலில் இறங்கினால்
உருப்படாத நிலை ஏதடா

பள்ளிக்குச் சென்று படியடா
பலருக்கும் நன்மை செய்யடா
தீமை தெரிந்து திருந்தடா

புலியையும் பூனையாய் நடத்திட
புத்தியை திருத்தி வையடா

நல்ல செயலுக்கு இணையடா
நல்லவர் செயலைக் கொள்ளடா

கெட்ட செயலை மிதியடா
கிட்ட அணுகாமல் விரட்டடா.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.

ஃஃஃ

கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 29, 2007

எந்தன் நாயகி….

ஆறுதரம் வெறுத்து நின்றாள் கலைமகள்
நூறுதரம் நினைத்து வந்தாள் திருமகள்
பேபி கிளாஸ் கடந்திருப்பாள் வளர்மகள்
என் பேரைச்சொல்லி தேடி நிற்பாள் இளம் மகள்
கட்சி கட்டி திரிந்த எங்கள் இளம்மகன்
எந்தன் கருத்தை கேட்டால் கல்வியிலே முதலவன்
அவன் கலைகள் பல கற்றுயர்வான் இனியவன்
நாட்டைக்காக்கும் பணிகள் செய்து
நலம் பெறுவான் தலைமகன்
வீட்டைக்காக்கும் உயர்வினிலே
பலன் பெறுவான் இளையவன்
நல்ல பிள்ளை பெற்றுக்காக்கும் எந்தன் நாயகி
நடைபிணமாய் அலைவதில் லாபமோ?!….

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.

ஃஃஃ

Older Posts »

பிரிவுகள்