கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | டிசம்பர் 5, 2007

சக்தியே துணை வருவாய்…

ஆதித்தன் சுழற்சி கண்டு
சோதிடம் கணிப்பதுண்டு

மாதிடம் மையல் கொண்டு
மனத்திடம் குறைவதுண்டு

சாதித்த செயல்கள் கொண்டு
போதிக்க நன்னையுண்டு

பாதிப்போர் நிலைமை கண்டு
மீதி என்ன நடக்குமென்று
வாதிக்கும் மனங்கள் இன்று

சோதிக்கும் சிவனே நீயும்
ஆதிக்கம் நேர்கெடாமல்
போதிப்பாய் அறிவை என்றும்.

ஜோதியாய் உடனிருந்து
பதிபக்கி குறையாமல்
மதி நலன்கள் குன்றாமல்
பதி மனதை புரிந்து நல்ல
பக்தியோடு பாக்கியங்கள்
பல திறனும் பெற்று வாழ
ஆதியே ஜோதியாம் எங்கள்
சக்தியே துணை வருவாய்.

ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்