இடையில் சாவோர் கோளை
இவர் விட்டுச் செல்லும் தேளை
நம்பி எவரும் தொட்டிடும் வேளை
கொட்டப்படுவோம் நாளை.
திருடலாம் கள்வர்கள் சொத்துக்களை
திருடிக்குறையுமா அறிவென்ற பலாச்சுளை
தீங்கு மறைக்கவரும் வேளை
திரும்பிப்பார் நல்லோர் சுவடுகளை
திருப்பிப்பார் நல்லோர் ஏடுகளை
திருட முடியுமா நம் திறமைகளை
திமிரு தினவு தீங்கு வெறும் ஊளை
இவைத் தேடித்தராது நல்ல நாளை
புலியை எதிர்க்கும் கொம்புக் காளை
கருப்புத் துணிக்கே மிரளும் ஒருவேளை
கற்பு கடமை கட்டுப்பாடு தரும் புகழை
காலம் தெளியவைக்கும் நாளை
அன்பு அறிவு அடக்கம் ஏழை
யாரும் திருடிக்குறையாத பேழை
தெய்வத்தை வணங்கிப்பெரு அருளை
நல்ல தேவைக்கே செலவுசெய் பொருளை
அன்போடு ஒன்றுசேரும் நாளை
ஆவலோடு எதிர்பார்ப்போம் நாளை
ஆண்டவனை வேண்டிடுவோம் தினமிருவேளை.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ