கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 29, 2007

நெஞ்சம் நிறைய நீதி இருக்கு…

நேற்று வந்தோம் இனிறிருப்போம்
நாளை போவது நிஜமடா

நேரில் இந்நிலைமை கண்டும்
நெஞ்சில் பயமும் ஏனடா

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
அகந்தை வேண்டாம் கேளடா

பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
கெட்டதை பழக்கும் சினிமா ஏனடா

கோழி கூட குஞ்சை காக்க
பருந்தை விரட்டும் பாரடா

இது போல் கோடி செயலின்
மொத்த உருவம் தாயடா

நூலாய் தேய்ந்தும் பாலாய் தந்து
நோயில் காத்தவள் தாயடா

அவள் நெடியஉருவம் உருகி குறுகி
உலகில் அலைவது ஏனடா

அன்னை தந்தை ஆசான் தெய்வமென்பது
அரிச் சுவடி பாட்டடா.

அவர்கள் அந்திமக் காலம் காக்கும்
ஆண்மகனும் உலகில் குறைவடா.

நெஞ்சம் நிறைய நீதி இருக்கு
சொல்ல முடியா நிலையடா.

வஞ்சகத்தை நெஞ்சகத்தில்
வரவிடாமல் விரட்டடா

மந்திரத்தால் மாங்காய்
வந்தது நேற்றடா

தந்திரத்தால் எந்திரத்தால்
மலையே வருகுது இன்றடா

உற்றுக்கவனித்து செயலில் இறங்கினால்
உருப்படாத நிலை ஏதடா

பள்ளிக்குச் சென்று படியடா
பலருக்கும் நன்மை செய்யடா
தீமை தெரிந்து திருந்தடா

புலியையும் பூனையாய் நடத்திட
புத்தியை திருத்தி வையடா

நல்ல செயலுக்கு இணையடா
நல்லவர் செயலைக் கொள்ளடா

கெட்ட செயலை மிதியடா
கிட்ட அணுகாமல் விரட்டடா.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg
எழுதிய நாள் : மே-1980
இடம் : சவுதி அரேபியா.

ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்