கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 23, 2007

என்னுயிரே ஏன் கலக்கம்.

மாமன் அத்தை பரிகொடுத்தேன்
மனமயக்கத்தைக் கடை விரித்தேன்
பிஞ்சு மனதை காத்திருக்க
என் பூங்கவிதை நீ துணையிருக்க
மலர் மனதை திடப்படுத்தி – சில
மனிதர் கதை புரிந்து நின்றேன்.

வஞ்சகத்தை நம்பி நம்பி
நீ வாடுவதை விட்டுவிடு
என் மலர் வனத்தை வதங்கவிட்டு
வெறும் மனத்தை காவல் செய்தேன்
நீ திருஉள்ளத்தை உடையவிட்டு
தெருக் குளத்தை நம்பிடாதே.

கனிமரத்தை வெட்டவிட்டு
கலக்கமதை கடைவிரித்தேன்
தனிமரத்தைப் போலே – நீ
அங்கே தவிக்கும் கதை பிறரறியார்
உன் மனதை நான் அறிவேன்
உன் கருத்தை எழுதிவிடு.

ஆறுமனதை காவல் செய்ய – நான்
கூறும் கதை கொஞ்சமல்ல
கெட்ட கதை பேசுவோர்கள்
பிஞ்சு மனதை கெடுத்திடாமல்
அறிவு பெட்டகத்தை காத்திடுவாய்
நான் வரும் வரைக்கும்.

என் மனதை புரிந்த பின்னும்
இக்கவிதை படித்த பின்னும்
என்னுயிரே ஏன் கலக்கம்.

ஃஃஃ
எழுதியவர் :

marthandam-for-nila.jpg
ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்