கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 22, 2007

நேச உறவு பாரடா….

காட்டுக்குரங்கு தானடா கண்ணா
அதன் கருணை முகத்தை பாரடா
நேற்று வெளிவந்த கோழி குஞ்சிடம்
நேச உறவைப் பாரடா
குஞ்சு சுகமும் குரங்கு முகமும்
கூறும் கதைகள் ஏதடா
காட்டு மிருகம் தானடா கண்ணா
இவைகள் கற்று வந்த பள்ளி ஏதடா
நமக்கு படித்துத்தந்த பாடம் கேளடா
ஜந்தறிவு மிருகம் கூட பறவை குஞ்சை
அணைத்துக் காக்குதே கண்ணா – சில
ஆறறிவு மனித கூட்டம் வெறுத்து ஒதுக்குதே
கருணை உள்ளம் கொண்டதாலே
கருங்குரங்கும் கோழிக்குஞ்சும் கவிதையாகுதே கண்ணா
இந்த கருத்தை புரிந்தும் மனிதருக்கு பாசமில்லே
அன்புகொண்ட முகத்தைப் பாரடா
அவைகள் அணைத்திருக்கும் அழகைப் பாரடா கண்ணா.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg

ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்