அவனி வாழ்வில் மனித கூட்டம்
அல்லல் படுவது ஏனடா…
நீயும் நானும் உறவடா
நெஞ்சம் நிறைந்த பகையடா…
பல் தெரியும் சிரிப்படா
ஒரு பலன்தராத நிலையடா…
வாய் நிறைய இனிப்படா
வயிறு முட்டும் கசப்படா…
இருபதில் முருக்கம் அறுபதில் கிறக்கம்
இயற்கை தந்த வரமடா…
அன்பில்லாத வாழ்க்கை தேடி
அலுத்துவிட்ட ஓடடா…
வாழ்க்கை தேடி வரவு நாடி
வரண்டுவிட்ட கூடடா…
வரவு செலவு கணக்கு பார்த்தால்
ஒரு வகை சேராது வாழ்வடா…
இயற்கை எய்தி போனபின்னே
ஓர் எலும்பும் மிஞ்சாத நிலையடா
இன்றைய மனித வாழ்வடா !!!……
ஃஃஃ
எழுதியவர் :
