கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….3

அச்சம் வேண்டாம்
அழிவு வேண்டாம்
அறிவைத்தாரும் தேவியே

கோபம் வேண்டாம்
கொடுமை வேண்டாம்
குணத்தைத் தாரும் தேவியே

பயமும் வேண்டாம்
பசப்பும் வேண்டாம்
நல்ல பலனைத் தாரும் தேவியே

களவு வேண்டாம்
சூது வேண்டாம்
கண்ணியமாய் வாழ்வதற்கு வழியைத்தாரும் தேவியே

நோயும் வேண்டாம்
நொடியும் வேண்டாம்
நோயில்லா வாழ்வு வேண்டும் தேவியே

கள்ளம் வேண்டாம்
கபடம் வேண்டாம்
கருணைநிறைந்த மனதைத்தாரும் தேவியே

உலகில் உள்ள
நன்மை எல்லாம்
உற்றறியும் திறமை தாரும் தேவியே

மெய்ஞானமும்
விஞ்ஞானமும்
கற்றுயர அறிவைத்தாரும் தேவியே

விருது பெற்ற
வீரத் தலைவன்
வழியறிந்து நடந்திட வகையைத்தாரும் தேவியே

பல கலையும் கற்க வேண்டும்
பாலர் எல்லாம் படிக்க வேண்டும்
பயிர்கள் நன்றாய் செழிக்க வேண்டும்
பருவகால மழையும் வேண்டும் தேவியே

விட்டபயிர்கள் விளைய வேண்டும்
வீடுதோறும் இன்பம் வேண்டும்
வீம்பில்லாத மனதைத் தாரும் தேவியே

பெரியோர்களை மதித்து நல்ல
பெற்றோர்களை பாதுகாக்கும்
பெருமை வேண்டும் தேவியே.

கல்வி வேண்டும் திறமை வேண்டும்
காளையற்கும் கற்பு வேண்டும்
கருணை கூர்ந்து காத்திடுவாய் தேவியே

காளையர்க்கும் கன்னியர்க்கும்
கற்பைக் காக்கும்
குலப்பண்பு வேண்டும் தேவியே…

அன்னை குலத்தை போற்றிக்காக்கும்
அகம் நிறைந்த
அறிவு வேண்டும் தேவியே..

காதல் வேண்டும் வீரம் வேண்டும்
இவைகள் வரம்பு மீராத
தெளிவு வேண்டும் தேவியே…

அழுதப் பிள்ளைப் பால்குடிக்கும் என்ற
அமைப்பைப் போல நாங்களும்
விரும்பும் நலம் பெறுவதற்கு
நல்ல விவரம் தாரும் தேவியே..
ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்