கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007

ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….2

அன்பும் அறமும் பெருக வைக்கும் அருள் நிறைந்த தேவியே
ஆதிகாலத் தேவியே எங்கள் ஆவரையின் ஜோதியே
இன்னல் காத்து இனிமை சேர்க்கும்
ஈடில்லா ஜோதியே
உனது வீடு எங்கள் கோவில் உலகில் பெருமை பெற்றிட
ஊழி உள்ள காலம எல்லாம் ஊரும் கூடி வணங்குவோம்
எங்களுக்கும் உலகில் சிறந்த எல்லா நலமும் வேண்டுமே
ஏழை எங்கள் குறை மறந்து ஏற்றம் தாரும் தேவியே
ஐயப்பாட்டை போக்கியே ஐக்கியமாய் வாழவே
ஒற்றுமையாய் நாங்களும் ஒரு தீங்கும் அணுகாமல்
ஓங்கு புகழ் பெற்றிட ஓய்வு கொள்ளா மனதுடன்
உனது பாதம் போற்றுவோம் வேண்டும் வரம் தருவாய் தேவியே.

ஃஃஃ

எழுதியவர் :

marthandam-for-nila.jpg


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்