எங்கள் முன்னோர்கள் போற்றி வணங்கிய முத்தாரம்மனே
தாயறியாக் குழந்தையில்லை,
நீயறியா நிலைகளிலில்லையென்று
பலகலையும் கற்றுணர்ந்தவரும்
பாரினில் உனை வணங்கும் வண்ணம்
எல்லா நலன்களையும் எங்களுக்குத் தாருமம்மா
பாலுக்குள்ளே நெய்யைப்போலும்
சிப்பிக்குள்ளே முத்தைப்போலும்
கானலிலே ஊற்றைப் போலும்
எங்களுக்குள் நீயிருந்து இயக்கிடுவாய் தேவி.
ஃஃஃ
எழுதியவர் :
கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 21, 2007
ஆவரையின் ஜோதியே…..முத்தாரம்மனே….1
பக்தி இல் பதிவிடப்பட்டது

நம் உடம்பில் உயிர் எங்கேஇருக்கின்றது , அது எப்படி இயங்குகின்றது என்பதை அறியவேண்டுமா ,வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கவேண்டிபோனால்முடியாது அங்கே இறுத்துக் கெண்டு அம்மா கவிதை வேஸ்டு ஊறுக்கு வாறும் மார்தாண்டம்,,,,,,,,,,,
எழுதியவர் harisma1489 நாள் டிசம்பர் 1, 2007
நேரம் 5:51 மு.பகல்
நட்புடன் கரிஷ்மா,
சொந்த நாட்டிலிலுந்து கொண்டு நாட்களையும் நாட்டையும் பாழடிப்பவர்களுடன் ஒப்பிடும் போது சொந்த நாட்டில் நியாயமாக உழைத்து சம்பாதிக்க வழியில்லா காரணத்தினால் குடும்பத்தைக்காக்க அயல் நாடு சென்று சம்பாதித்த பணத்தில் அரைவயிறு சாப்பிட்டு விட்டு மீதத்தை குடும்பத்திற்கு அனு்ப்புபவர்கள் தெய்வங்கள்.
அவர்கள் இந்தியாவின் செல்வங்களை திருடிச்சென்று விடவில்லை, கல்வி உட்பட.
அவர்களை இனியாவது மதிக்கப்பழகுங்கள்.
நன்றி.
எழுதியவர் கலை அரசன் மார்த்தாண்டம் நாள் டிசம்பர் 1, 2007
நேரம் 7:25 மு.பகல்