கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஆகஸ்ட் 9, 2007

கனவெயிலும் கால்வெடிப்பும்…


கனவெயிலும் கால்வெடிப்பும் துன்பம் தரும் நேரம்
கண்ணுதிர்க்கும் நீரும் வெந்நீராய் மாறும் காலம்
துன்பமென்று மனம் வருந்தி கண்ணயரும் நேரம்
கனிமொழியாள் அருகில் வந்து கலகலப்பாய் கூறும்
கற்கண்டு தேன் தமிழில் கவிதையுள்ளம் மீறும்.
கடுங்குளிரும் கனவெயிலும் கடத்திவிடத் தோணும்
கற்பனையும் அற்புதமும் கலந்து உறவாடும்
கண்மணிகள் கிள்ளைமொழி காதில் வந்து மோதும்
கஷ்டமதை கண்கண்ட தோணியாக்கி கனகடலும் தாண்டும்.

* * *

எழுதியவர்:
மார்த்தாண்டம்.
Late. R. மார்த்தாண்டம்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்