கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | December 31, 2006

புத்தாண்டே நில்லு

புத்தாண்டே நில்லு
புனிதம் பெருக வழிசொல்லு
புண்படுத்துது பல்லு
பொருப்புணரச் சொல்லு
நலம்புரியும் படிச் சொல்லு
நடந்த துண்பம் தள்ளு
நாசச்செயல் வெல்லு
அதிகமில்லை நெல்லு
அரிசியிலே கல்லு
அனேகக் கியூவில் மல்லு
ஆட்சியாளர் வில்லு
அறிவாய்வளரச் சொல்லு
அவசியத்தை மெல்லு
அகந்தை திருந்தச் சொல்லு
ஆட்டம் போடுது பல்லு
காட்டம் சேர்க்குது சொல்லு
உழைத்து வாழச் சொல்லு
உதவாத் தனத்தைத் தள்ளு
புதுமைப் பெருகச் சொல்லு
ஏமாற்றும் நிலையைத் தள்ளு
இனியப் பண்பைச் சொல்லு
அன்பினிலே வெல்லு
புத்தாண்டே நில்லு
புகழ் நலனைச் சொல்லு
புரியும்படி சொல்லு.

ஃஃஃ
marthandam.JPG

எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 08.01.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃPosted on:31.12.06


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்