கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 28, 2006

வாழ்வதற்கே தரணி

வாழ்வதற்கே தரணி
வளம் நிறைந்த காணி
வரண்டுவிட்டால் பரணி
இதயம் ஒரு பாணி
இளம் உலகே கவனி
தாகமந் தீர்க்கத் தண்ணி
தடுமாற்றத்திற்கும் தண்ணி
இதை வகைவகையாய் எண்ணி
வளரும் நலமே கவனி.
குடிகெடுக்க எண்ணி
கொண்டுவைப்பார் கண்ணி
அகப்பட்டால் படும்பாட்டை எண்ணி
இனிய நெஞ்சே கவனி
இயற்கை நலம் பேணி
செயற்கையிலே நாணி
இதயம் எனும் மானி
இயங்கிடுமோர் பாணி.
இளம் உலகே கவனி
கண்டு ஒரு கூனி
இனம் சேர்ந்த சகுணி
குழிதோண்டும் பாணி
கொண்டு வைப்பார் ஏணி
இதயம் எனும் மானி
இருட்டாவரை ஞானி
இனம் கண்டறிந்தால் வேணி
இல்லையேல் எருமையிட்ட சாணி.
அறிவுத் திறன் பேணி
அண்டுவோரைக் கவனி
உயிர் குடிக்கும் உன்னி
உருண்டு வாழும் பண்ணி
இனம் உணர்ந்து எண்ணி
இளம் உலகே கவனி
கோளுரைக்கக் கூனி
குடிகெடுக்க சகுனி
உயிரெடுக்க உன்னி
ஊரைச்சுற்றும் பண்ணி.
தடுமாறும் தண்ணி
இவைகள் தன்மையை எண்ணி
இளம் உலகே கவனி
கவிழ்ந்திடாமல் பேணி
வாழ்ந்திருந்தால் ஞானி
இதயம் என்னும் மானி
இருட்டவிட்டால் போணி
வகை பலவும் எண்ணி
வாழ்க்கை என்னும் தோணி
கரைசேர எண்ணி
கண்டரிந்தால் வாணி
இல்லையேல் நாற்றம் வரும் கேணி.

ஃஃஃ
marthandam.JPG

எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : ஆகஸ்ட் – 1980.
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுவினைகள்

  1. nanru


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்