கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 27, 2006

உள்ளம்.

பாடம் கேட்பது பால உள்ளம்
பதிலை சொல்வது பகுத்தறிவு உள்ளம்
வாழ்வில் வெல்வது திறமை உள்ளம்
வருத்தம் கொள்வது வருமை உள்ளம்
சோர்ந்து கெடுவது சோக உள்ளம்
சுகத்தைத் தருவது அன்பு அறிவு உள்ளம்
ஏங்க வைப்பது அன்பு உள்ளம்
தூங்க வைப்பது சோர்ந்த அமைதி உள்ளம்
காதல் கொண்டது காளை உள்ளம்
கலங்கித் தெளிவது கன்னி உள்ளம்
வாட வைப்பது ஆசை உள்ளம்
வழி வகுத்தது பாச உள்ளம்
சோர்வைத் தருவது சோம்பல் உள்ளம்
சுகத்தைத் தருவது உழைக்கும் உள்ளம்
பொங்கி வருவது ஆசை உள்ளம்
பொருப்பை உணர்வது அறிவு உள்ளம்
நன்றி மறப்பது நாச உள்ளம்
நாசத்தை வளர்ப்பது பொறாமை உள்ளம்
நல்லதே செய்வது நட்பு உள்ளம்
நட்பை வளர்ப்பது நல்ல உள்ளம்
நடப்பை உணர்வது அமைதி அறிவு உள்ளம்
ஒற்றுமை வளர்ப்பது பொருமை உள்ளம்
இனிமை செய்வது இசைந்த உள்ளம்
இழுத்துச் செல்வது கால வெள்ளம்
எத்தனை வகையானது உலகில் உள்ளம்
இனியும் வராது எல்லாம் அறிந்த உள்ளம்
இருந்காலும் எண்ணுவது ஈசன் உள்ளம்
எல்லாம் அறிந்தது படைத்த ஈசன் உள்ளம்.
ஃஃஃ


marthandam.JPG


எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : ஜூலை-1980.
இடம் : சவுதிஅரேபியா
ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்