கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 25, 2006

என்று தீரும் கஷ்டம்.

பழந்தமிழன் நிழலாட்டம் பண்புடையோர் திருக்கூட்டம்
கட்டப்பொம்மன் வடிவாட்டம் காளையர்கள் நடமாட்டம்
பாரதியார் நினைவாட்டம் பாபநாச சிவன் கூட்டம்
காமராஜர் நினைவாட்டம் கண்ணியவான் பெருங்கூட்டம்
பசும்பொன் நினைவாட்டம் பாசமக்கள் திருக்கூட்டம்
இயற்கை எழில்ப்பூந்தோட்டம் இதயமன்னர் தடுமாற்றம்
எத்தனையோ வகைநாட்டம் இதற்கு ஏற்காத திண்டாட்டம்
இயற்கை ஆடும் பேயாட்டம் வீம்புக்கு ஏன் வெறுங்கூட்டம்
விவரம் வந்தோர்போராட்டம் விடிவுகாண வழிகாட்டும்
குமரி மாவட்டம் பக்கமுள்ளது நம் தோட்டம்
பத்துமைல் எட்டம் பாழாறு கடலுக்குள்ளே ஓட்டம்
ஆண்டுவரும் கூட்டம் ஆய்ந்து பார்த்தால் நஷ்டம்
பத்தடி ஆழத்திலே ஆற்று ஓட்டம்.
மழைக்கால நீரோட்டம் மண்நிரப்பும் வயல் கூட்டம்
ஒழுகுனசேரி ஓரத்திலே ஒவ்வோராண்டும் நடக்கும் இத்திண்டாட்டம்
நெல்லை நமது மாவட்டம் நேர்மை நமது பெருந்தோட்டம்
மழையில்லா பயிராட்டம் விளைநிலங்கள் பெருவாட்டம்
தொழில் ஆலையில்லா திண்டாட்டம் வேலையில்லா பெருங்கூட்டம்
உழைப்பவர்கள் கூட்டம் உரிய பயனடையா வாட்டம்
ஏழைகளின் திண்டாட்டம் கந்தலிலே உடலின் வாட்டம்
ஆடியிலே காத்தாட்டம் ஆவணியில் கூறைப்பிரிந்தோட்டம்
புரட்டாசி மழைத்தோற்றம் ஐப்பாசியில் கூரையில்லாசுவராட்டம்
மழைக்கால மிளகு செடியாட்டம் மயங்கும் ஏழைவிவசாயிக்கூட்டம்
மூடிழந்த மிளகுபயிராட்டம் மிஞ்சும் ஏழைத்திண்டாட்டம்
சிங்கம் நிகர்விவசாயி கூட்டம் சிக்கலிலே மாராட்டம்
சுவரில்லா வீட்டாட்டம் வாசமிலாலப் பூவாட்டம்
வந்துபோகும் கொண்டாட்டம்
விளைந்தும் விலையாகா புகையிலையாட்டம்
வயதுவந்த கன்னி மக்கள் திண்டாட்டம்
இருந்தும் நீங்காவாட்டம்
என்று தீரும் இவ்வகை கஷ்டம்.
ஃஃஃ


marthandam.JPG


எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 13.11.80
இடம் : சவுதி அரேபியா.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்