நீ என்னை நம்பவில்லை
என்றாலும் வெம்ப வில்லை
நன்றி கொன்றான் நானுமில்லை.
நல்லவர்கள் சொன்ன சொல்லை
நம்மவர்கள் ஏற்க வில்லை
சந்தணமும் நாரவில்லை
சாக்கடையும் மணப்பதில்லை
சுட்ட வடு சீரவில்லை
சோகம் மடடும் மாறவில்லை
சாக்கடை ஓடும் எல்லை
சந்தணமும் மணக்க வில்லை
உன்னாட்டம் நானும் இல்லை
உடைத்தெழுதி லாபம் இல்லை
உன் கணிப்பு மறுக்கவில்லை
உயர் அறிவு எனக்கில்லை
நடுநிலையால் பட்ட தொல்லை
நன்றி கொன்றான் என்ற சொல்லே.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் :
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ