கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | அக்டோபர் 14, 2006

சிந்தை செய் மனமே…


சுட்டது வார்த்தை பட்டது காயமென்று
திட்டமாய் தினமுருகி எட்டடி மண்டபத்தில்
இடம் தேடும்முன்னே பட்டறிவை துணைகொண்டு
கஷ்டங்கள் இன்னதென கணித்துவிடு நற்குணமே.

சிந்தைக்கு உகந்ததென சீர்குலைவை வாங்கிவிட்டு
சந்தை இரைச்சலைப்போல் சிந்தை இரையுமுன்னே
மந்தையிலே கால்நடைபோல் மதிமயங்கி நிற்குமுன்னே
விந்தையுலகை உணர்ந்துவிடு நற் குணமே.

சிகப்பு கருப்பென்று சிந்தையை தூவிவிட்டு
சிரங்குப் படைகளென சிக்கலிலே வாடிவிட்டு
சிறைவாழ்வோ என்று சீரியழுது ஏங்கி
சிவனடியைச் சாருமுன்னே சிந்தைசெய் மனமே.

நீர் பெருவாய் நற்குணமே.
ஃஃஃ


marthandam.JPG


எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 12.11.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்