இறைவன் இனியவை நிறைய வைத்தான்
ஏழைகள் ஏங்கிட வழி அமைத்தான்
எத்தரும் வாழ்ந்திட மதம் படைத்தான்
சுத்தர்கள் சோர்ந்திட சுகம் தடுத்தான்
சோகத்தைச் சுமந்திட வரம் கொடுத்தான்
கயவரைக் காத்திட பணம் படைத்தான்
காவல் என்றொரு தொழில் கொடுத்தான்
கயமையை பொசுக்கிட வழி வகுத்தான்.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 26.07.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ