கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | அக்டோபர் 5, 2006

சரியில்லே!…மெத்தச் சரியில்லே!!…


விதியென்று நம்பி வீதியிலே தூங்குவதும்
சாதிமதம் பேசிப்பேசி சாந்தியைச் குலைப்பதும்
சரியில்லே மெத்தச் சரியில்லே.

நீதியெனப் பேசிப்பேசி நிதிதிரட்டி எய்ப்பதுவும்
பதிதர்மம் என்றுசொல்லி பத்தினியை வதைப்பதுவும்
சரியில்லே மெத்தச் சரியில்லே.

கதி யில்லா ஏழை என்றும்
விதிசெய்த கோலமென்றும் மதிமாரித் திரிவதும்
சரியில்லே மெத்தச் சரியில்லே.

உழைக்காமல் உண்ண எண்ணி கெட்ட
உபாயங்கள் தேடுவதும் அடுத்தவரை ஏய்ப்பதுவும்
சரியில்லே மெத்தச் சரியில்லே.

நாதியற்ற ஏழையிடம் வாதவம்பு பண்ணுவதும்
சாதிநீதிப் பேசிப்பேசி உழைக்காமல் ஜனத்திரளை கூட்டுவதும்
சரியில்லே மெத்தச் சரியில்லே.
ஃஃஃ

எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 25.02.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்