கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | செப்டம்பர் 29, 2006

பட்டிக்காட்டான் பாட்டு

வெட்டிவிட்ட ரோஜாச்செடி தளிர்த்து பூவாப் பூக்குது
முட்டி மோதி வாழ்க்கையிலே முயற்சி தேடுது

திட்டத் தெளிவு முன்னால் தீமை விலகுது
கொட்டவரும் தேளும் கூட கொடுக்கை உயர்த்துது

வட்டமிடும் பருந்தைக் கோழி வகுத்து உணருது
கட்டழகு கிளிகள் சில வலையில் வீழுது

பொட்டும் பூவும் நிலைத்துவாழ புத்தி ஏங்குது
மட்டமான செயல்கள் தானே நம்மை சூளுது

திட்டிப்பேசி ஏசிவிட்டு பாசம் தேம்பி அழுகுது
பட்டுத்துணி பகட்டில் தானே மனம்பரவி நாடுது

பட்டணத்து பகட்டு முன்னே பலதும் வீழுது
பட்டிக்காட்டான் எந்தன் பாட்டு எங்கே எட்டப்போகுது.

ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 20.01.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுவினைகள்

  1. கலை நீங்கள் எல்லா கவிதைகளையும் ஒரு பிடிஎப் பைலாக போடுங்கள் அல்லது சொல்லுங்கள் . ஏன்னா தங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது. பிறகு காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்