கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | செப்டம்பர் 19, 2006

பொய்யாடும் ஆட்டத்திலே…


வாட்டமின்றி வாழ்ந்திடவே வழி இருக்குது
வரவைமிஞ்சி செலவுவந்து விழி பிதுங்குது
வறுமைவந்து வாழ்வு ரெம்ப ஏக்கமாகுது
வஞ்சியரைக் கெடுத்திடவே வஞ்சம் வலைவிரிக்குது
விரும்பாத வம்புவந்து வட்டம் போடுது
வணங்குகின்ற தெய்வமேனோ வானில் தூங்குது
மறப்போரை மறந்திடவே மனமும் துடிக்குது
மாராமல் கனவு வந்து தினம் வதைக்குது
பெய்யாத மழையையெண்ணி பூமி பொட்டலாகுது
பொய்யாடும் ஆட்டத்திலே மெய்யும் சேருது
பலநலன்கள் கூடிவர திட்டம் போடுது
தீங்குகளின் நிலையறிந்து திகைத்து ஏங்குது
தேவி அன்னை துணையிருந்தால் தீமைமாறுது.

ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 15.01.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுவினைகள்

  1. good one.
    http://thakaval.wordpress.com

  2. tsvavzrcm

    ykrpwjfaxs djhavilo zhwmtxxhq zrnpqd


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்