ஆடி அசையும் மயிலு
ஆட்டிப் படைக்குது வெயிலு
காற்றில் ஆடுது துயிலு
கவன அறிவைப் பயிலு
பச்சைப் பசேலென வயலு
பம்பரம்போல் உழைக்கும் உடலு
பாசம் பார்த்திடும் அன்புமடலு
பாசத்தாய் அன்புக் கடலு
சாலையில் நிறைய ஆலு
ஆலு நிறையக் குயிலு
வலையை விரிப்பான் வாலு
கண்ணில் சிக்குமுன் – அடகுயிலு
கண்டு விலகப் பயிலு
ஆத்திரம் மீறினால் ஜெயிலு
அன்பாய் அறிவாய் நலம்பயிலு.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 13.01.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ
ஆகா என்ன கவிதை
அருமையான கவிதை
யார் அந்த மார்த்தாண்டம்
எழுதியவர் என்னார் நாள் செப்டம்பர் 19, 2006
நேரம் 3:22 பிற்பகல்
இரத்தினவேலு சார்,
திரு.மார்த்தாண்டம் அவர்கள் காலம் சென்ற என் தந்தை.
எழுதியவர் கலை அரசன் மார்த்தாண்டம் நாள் அக்டோபர் 1, 2006
நேரம் 1:06 மு.பகல்